மூத்தாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி

posted May 17, 2012, 8:08 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated May 30, 2012, 10:49 PM ]
திரு .ரவீந்திரன் ராமசந்திரன் :

வணக்கம்,
நம் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி இல் தற்போது 20 க்கும் குறைவான மாணவ மாணவிகளே உள்ளனர் . வருகின்ற ஆண்டுகளில் இதே நிலைமை நீடித்தால் நமது பள்ளியை மூடுகின்ற சூழ்நிலை கூட ஏற்படலாம். தற்போது நமது பள்ளி இல் தமிழ் வழிக்கல்வி தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம் . இந்த காரணத்தில் தான் நமது குழந்தைகளை நமது பள்ளியை விட்டு விட்டு இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்கின்றோம் . ஏன் நமது பள்ளியை இங்கிலீஷ் மீடியம் பள்ளியாக மாற்ற கூடாது .நம்மளையும் ,நம்மது முன்னோர்களையும் உருவாக்கிய நமது பள்ளியை காப்போம் . நமது பள்ளியை இங்கிலீஷ் மீடியமாக மாற்றுவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோமாக ....

இந்த கொள்கை இல் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

shared via :www.moothakurichi.com/needs-feedback and moothakurichi facebook
Comments