பணத்திற்காக தொழில் செய்வது நகரத்தில் வசிப்பவர்களின் வழக்கம் . நகர வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் வசிப்பவர்களின் வயிற்றின் தேவையை பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான தொழில் விவசாயம் . கிராமத்திற்கு மட்டுமே உரிய ஒரு மிகப் பெரிய பெருமை விவசாயம் .மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டம் . நம் மக்களுக்கு நூதனமாக தொழல் வளர்ச்சியை பெருக்கியது . மக்களின் பண அத்தியாவசியத்தை புரிந்து பகுத்தறிவோடு தீட்டிய இந்த திட்டம் மக்களின் 100 ஆண்டு ஆயுள் திட்டமாக விளங்குகிறது . உள்நாட்டில் மட்டுமல்ல எங்கள் மக்களின்திறமை அயல்நாட்டிலும் உணரப்பட்டுள்ளது . வெளிநாட்டில் சென்று அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறமை எங்கள் மக்களு்க்கும் உள்ளது . இதுவும் எங்கள் மக்களின் பொருளாதார வளர்ச்சியை கூட்டுகிறது . சுயத்தொழில் செய்வது சுலபமன்று , சுயலாபம் எதிர்பார்ப்பது மட்டுமின்றி சுயநலம் விலக்கி விலைவாசியை அமைத்து தொழில் செய்வது , எங்கள் மக்களின் நம்பிக்கையின் குறியேடு . மக்களை நம்பும் மக்கள் . இதுதான் எங்கள் கிராம வாசிகளின் சுயத்தொழில் தந்திரம் . கிராம மக்களின் முக்கியத் தொழிலாகக் கருதப்படுவது விவசாயம். இரண்டில் ஒரு பகுதி மக்களின் வசிப்பிடத்திற்க்கும், மற்றொரு பகுதி விவசாயத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது. மண்ணில் விளைவிக்கப் படும் முக்கிய விளைச்சல்கள் நெல், உளுந்து, நிலக்கடலை, சோளம், கரும்பு, எள் மற்றும் சில பயறு வகைகள் ஆகும். மேலும் விவசாயத்தின் ஒரு பகுதியாக தென்னை மற்றும் வாழையும் இம்மண்ணில் விழைக்கப்படுகிறது. நிலத்தடி நீர், ஆறு, குளம் ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய நீர் பாசனமாக பயன்படுத்தப் படுகிறது. விளைச்சலுக்கு பெரும்பாலும் இயற்க்கை உரமே பயன்படுத்தப் படுகிறது. மாடு மற்றும் உழவு எந்திரங்கள் ஏர் செய்வதற்கு பயன்படுத்தப் படுகிறது. கிராம மக்கள் விவசாய அலுவலரின் ஆலோசனை கேட்டறிந்து விவசாயம் செய்கிறார்கள். தமிழகத்தின் தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் (Coconut Research Station, Veppankulam) ஆலம்பள்ளத்திலிருந்து 1கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------- விவசாயம் பற்றிய தகவல் : ஆமணக்கு ஒய்.ஆர்.சி.எச்.1: நவீன தொழில்நுட்பம் பதிவு செய்த நாள் : ஜூலை 13,2011 --------------------------------------------------------------------------------------------------------------------------------- வேலிமசால் : பதிவு செய்த நாள் : ஜூலை 13,2011 தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான ""வேலிமசால்'' பயிரிடலாம். கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். செடியில் பச்சையம் சத்து அதிகளவு உள்ளதால் கால்நடைகளுக்கு மட்டுமல்ல, தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும். பார் பிடித்தல் 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார் களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மண் பரிசோதனையின்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 10:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும். விதை அளவு - தீவனத்திற்கு எக்டருக்கு 10 கிலோ. அமில நேர்த்தி: விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை 1000 செ.கி.க்கு கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து (800 செ.கி) விதைகளை 3-4 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அடுத்து சூடான நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் வைக்கலாம். விதைநேர்த்தி செய்தபின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக்கஞ்சியில் கலந்து காயவைத்தபின் விதைக்க வேண்டும். நீர் மேலாண்மை: பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலாண்மை செய்திட வேண்டும். வளர்ச்சியடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சூழ்நிலையையும்கூட தாக்குப்பிடித்து விடும். இருந்த போதிலும் விரைவான இளஞ்செடிகளின் வளர்ச்சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அறுவடை: நட்டபின் 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். தண்டின் விட்டம் 3 செ.மீ. அடைந்தவுடன் (அல்லது) ஒருமுறை விதை உற்பத்திக்கு விட்டவுடன் முதல் அறுவடை செய்யலாம். அதற்கு பிறகு 40-80 நாட்களில் வளர்ச்சி மற்றும் பருவத்திற்கேற்ப அறுவடை செய்யலாம். வறட்சி அதிகமுள்ள பகுதிகளில் மரத்தை இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். மரத்தை தரைமட்டத்திலிருந்து 90-100 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பூட்டு மற்றும் எரிபொருளாக பயன்படுத்த மரத்தை 2.5 அல்லது 5 வருடத்திற்கு வெட்டாமல் பக்கக்கிளைகளை அகற்றிவிட வேண்டும். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
-------------------------------------------------------------------------------------------------------------- வில்வேகம் - உயிர்ம பூச்சிக்கொல்லி : பதிவு செய்த நாள் : ஜூலை 13,2011 வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது. இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது. -------------------------------------------------------------------------------------------------------------- |