பிற கிராம செய்திகள்


மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

posted Jan 31, 2015, 6:00 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jan 31, 2015, 6:01 AM ]

மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களின் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் ஒன்றிய பெரும் தலைவர் .திருமதி அமுதா துரை.செந்தில் அவர்கள் தலைமையில நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மூத்தாக்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி வளைகாப்பு பொருட்களை வழங்கிய போது எடுத்தப்படம் .இதில் ஊராட்சி செயலாளர் பிரபு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர் .நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன்

மூத்தாக்குறிச்சி ஊராட்சி கண்டியங்காடு கிராமம்

posted Jan 31, 2015, 5:54 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jan 31, 2015, 5:57 AM ]

மூத்தாக்குறிச்சி ஊராட்சி கண்டியங்காடு பகுதியில் உபரி நிதியில் ரூபாய் 2.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டேங் .நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா:தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு விருது

posted Apr 24, 2013, 3:19 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த10 பஞ்சாயத்து பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர், பிரதமரிடம் இருந்து சிறப்பான செயல்பாட்டிற்காக விருது பெற்றனர். தமிழகத்திலிருந்து விருது பெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு வழங்கப்படும் விருது திருச்சியை சேர்ந்த ராஜாத்திக்கு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட செய்யார் யூனியன் தலைவர் விமலா மகேந்திரனுக்கும், கடலூர் மாவட்டம் அண்ணாகிராம யூனியன் தலைவர் சுந்தரி முருகனுக்கும் சிறந்த பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான விருதினை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பெற்றுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட பாப்பரம் பாக்கம் கிராமத்தலைவர் இந்திராவரதராஜன், கடலூர், காட்டு மன்னார் கோவில் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட நாட்டார்மங்களம் கிராமத்தலைவர் சுதா மணிரத்தினத்திற்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் ஓமலூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட திண்டமங்களம் கிராம தலைவர் பரமசிவம், கரூர் அரவக்குறிஞ்சியை சேர்ந்த ஈசாநத்தம் கிராம தலைவர் ராமசாமி ஆகியோரும் சிறந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கான விருதினை பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம், ஜி.கல்லுப்பட்டி கிராம தலைவர் வளையாபதி,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெத்துரெட்டிபட்டி தலைவர் ராஜேந்திரன், 
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனம் கிராம தலைவர் ஏழுமலை 

ஆகியோரும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

கருப்பூர் கிராமம் - http://www.karuppur.com/

posted Aug 28, 2012, 4:12 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Aug 28, 2012, 4:12 AM ]

நமது மூத்தாக்குறிச்சி கிராமத்திற்கு வடக்கு திசையில் அமைந்திருக்கும் கிராமமான கருப்பூர் அதன் இணைய தளத்தை நேற்று தொடங்கியது.

கருப்பூர் இணைய சுட்டி: http://www.karuppur.com/
தகவல் தெரிவித்த கருப்பூர் இணைய குழு நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் !!!!

1-4 of 4