மக்களுக்காக

நமக்கு நாம் தான் என்று தெரிந்த ஒன்று இருப்பினும் நம்மை பற்றி நமது கருத்துகளையும் , தேவைகளையும் பற்றி மக்களுக்காக மட்டும் மக்களின் கருத்தை நம் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறுபவர்கள் தான் மக்களின் பிரதிநிதிகள் அவர்களின் முழு கவனமும் , முழு கடமையும் , இந்த ஜனநாயகத்தை வளம் பெற வேண்டுமானால் மக்களால் , மக்களின் வாழ்வு முறை வகுக்கப்பட வேண்டும் .

மக்களின் முழு சுதந்திரமும் , அறிந்து செயல்படுவதே ஒரு நல்ல ஜனநாயகத் தனமிக்க அரசாங்கத்தின் கடமை இத்தககைய செயல்பாடுகளால் நம் சமுகம் வளம்பெற தூண்களாக அமைந்து வருபவர்கள் தான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ,நன்கு நினைவு கூற்க அவர்கள் மக்களின் ஊழியர்களாக செயல்பட வேண்டும் .

மக்கள் அவர்களின் பேச்சாற்றலால் திருப்தி அடைவது தவறு ஒவ்வொரு குடிமகனின் உண்மையான , உன்னதமான தேவைகளை அரசாங்கத்தின் வழியே நிறைவேற்றுவது அவர்களின் பணியின் பொருள் .

இது ஜனநாயக நாடு தான் என்று இருக்குமே ஆனால், மக்கள் பிரதிதிகள் மக்களின் நன்மையையும் நல்வாழ் வினையும் திருப்தியும் , தேசத்தின் ஒழுங்கு நெறிகளையும் நிலைநாட்டுவதே ஆகும் . மக்கள் ஆட்சி , ஆட்சி நடத்துபவர்கள் மக்களில் ஒருவர் தான் ஆனால் மக்களுக்காக மலரவேண்டும் , மக்களாட்சி.


அதுவே மக்கள் பிரதிநிதிகளின் கடன் .
Comments