இரா.சுகுமார், விக்ரமம்

posted Apr 14, 2013, 7:01 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்
மூத்தாக்குறிச்சி கிராம இணைய குழு நண்பர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்....

தங்கள் ஊரின் பெருமையை கல்விப்பணியின் மூலம் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் இப்பள்ளியின் சாதனைகள் தொடரும் விதத்தில் 2012 ம் ஆண்டிலும் நிரூபித்துக் காட்டியிருக்கும் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதேவேளையில் கிராமத்தின் செய்திகளையும், இப்பள்ளியின் சாதனைகளையும் உலகில் பரவிக்கிடக்கும் நம்மவர் அனைவரும் அறியும்வண்ணம் தூய தமிழில் வலையத்தில் உலாவவிடும் தங்களின் பணி மகத்தானது....தங்களின் வலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்....

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பக்கசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் சிறு பிழை இருக்கும் என்று நினைக்கிறேன்....சரிபார்த்துக்கொள்ளவும்....

மீண்டும் சந்திப்போம்....
என்றும் நன்றியுணர்வுடன்....
இரா.சுகுமார், விக்ரமம்.
Comments