நம் குடும்ப தலைவர்கள் பதிந்த முதல் அலுவலகமாம் நம் அருகாமையில் செயல்படும் நல்ல நலன் விரும்பியாம் மக்களின் குறைகளை தீர்க்கும் மதச்சார்பற்ற மடமாம் நம் நலனை பேணும் நல முதல் கூடமாம் அதுதான் நமது ஊரில் அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகம் . தொன்மையானாலும் மிகவும் நன்மையும் நம்பிகையுமாகச் செயல்பட்டு வரும் ஒரு முதன்மை துறை இந்திய அரசாங்கத்தின் தபால் துறை , பயன் பெறுவதும் மக்களால் பயன் அளிப்பதுவும் மக்களுக்கே , இதுவே இத்துறையின் சிறப்பம்சம் . இந்திய தபால் துறை சார்பில் எங்கள் கிராமத்தில் இருக்கும் தபால் அலுவலகம் மிகவும் பயனளிப்பதுதான். மக்களுக்கு அத்தியாவசியமான உணவு உடை இருப்பிடம் தவிர உணவின் முதன்மை பால் . இதை பூர்த்தி செய்யும் வகையில் எங்களுக்காக செயல்பட்டு வருவது நமது கிராம பால் உற்பத்தியாளர்களின் சங்கம் . உணவு பொருட்கள் விநியோகத் தரத்தை நம் தவறாமல் பெற்றிட , மாதா மாதம் மண்ணெண்ணெய் முதல் மற்ற சில உணவு பொருட்கள் அனைத்தையும் கிராம அரசு அங்கண் வாடியில் மக்கள் பெறுகின்றனர் . |