பள்ளி
பள்ளியின்  அமைப்பு :

10.06.1986 முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது . இப்பள்ளியானது மதுக்கூர் - அதிராமபட்டினம் சாலையில் மதுக்கூரி லிருந்து 2 சுமார் கீ .மீ தொலைவில் அழகான ,அமைதியான இயற்கை சூழலில்  அமைந்துள்ளது , இப்பள்ளியில் கல்வி பயில மூத்தாக்குறிச்சி, கொல்லடிக்கொல்லை, சிலம்பவேளாங்காடு ,காசாங்காடு , மன்னாங்காடு , துவரங்குறிச்சி,கண்டியங்காடு , வேப்பங்குளம் , மதுக்கூர் , அண்டமி மற்றும் விக்ரமம் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 500 மாணவ மாணவியர் கல்வி பயில வருகின்றனர் தலைமையாசிரியர், 5 ஆசிரியர்கள் ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக பணியாளர்  என்று மொத்தம் 8 பேர் பணியாற்றி  வருகின்றனர்.


பள்ளியின் சாதனை :

இப்பள்ளியானது இதுவரை 17 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி   பெற்று   சாதனை  படைத்து  வருகிறது  

2010-2011  ஆம் கல்வியாண்டு   பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .

முதல் மதிப்பெண் - 474 / 500

1..பார்கவி         த/பெ ரமேஷ்

 சிலம்பவேளாங்காடு 

2.வீ .அமலா         த/பெ வீரப்பன்

சிலம்பவேளாங்காடு 

          இரண்டாம் மதிப்பெண் - 466 / 500

1.அ.ராஜேஷ்     த/பெ அருளரசன் .

மதுக்கூர்  

       மூன்றாம் மதிப்பெண்-464 / 500

1.ரா.சதீஸ்குமரன்        த/பெ.ராமமூர்த்தி ,

மதுக்கூர் 

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய 56 மாணவர்களில் 19 மாணவ மாணவிகள் மதிப்பெண்கள் 400 க்கு  மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மேலும் கணிதத்தில் 5 மாணவ மாணவிகள் , அறிவியலில் ஒரு மாணவியும் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

இப்பள்ளியில் பயின்ற 5 மாணவிகள் மருத்துவ துறையிலும் மற்றும் அநேக மாணவ மாணவிகள் பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றுள்ளனர்


விளையாட்டுத் துறையில் சாதனை :

விளையாட்டுத் துறையிலும் இப்பள்ளி சிறந்து விளங்குகிறது ,இப்பள்ளி மாணவிகள் பால்பேட்மிண்டன்   விளையாட்டில் கல்வி மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் . மாணவர்கள் கைப்பந்து விளையாட்டில் கல்வி மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று வருகிறார்கள் , மேலும் இப்பள்ளி சாலை பாதுகாப்பு , ஆசனம் ,கூட்டு உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் மூலம்  மாணவ மாணவிகள் உடற்திறன் மற்றும் மனவளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


பிற வசதிகள் :

இப்பள்ளியில் 25 கணினிகள், 5 பிரிண்டர்கள் ,2 ஒளிப்படக்  கருவி மற்றும் ஒரு திரைக்கொண்ட கணினி அறை உள்ளது. சுமார் 1500 புத்தகங்கள் கொண்ட பள்ளி நூலகம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது 


பள்ளி சார்ந்த பிற செயல்பாடுகள் :

ஜே.ஆர்.சி, சாரணர் அமைப்பு , எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தேசிய பசுமைப்படை   ஆகிய இயக்கங்கள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது .


ஆசிரியர் பற்றாக்குறையால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 2 ஆசிரியர்கள் நியமனம் செயல்பட்டு   பணியாற்றி வருகின்றனர். 

பெற்றோர் ஆசரியர் கழகம் மற்றும் ஊர் பெரியோர்கள் ஒத்துழைப்புடன் இப்பள்ளியானது  இலைமறை காயாக அறிய பெரிய சாதனைகளைப்  படைத்து வருகிறது .

Comments