திரு.மலர்வண்ணன் அவர்களின் பதிவு : நோயுண்டவர் தும்மல், இருமல் வழி எச்சில்/சளி துகள்கள் நேரே நம் நாசினியில் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் "தூர விலக்கு" கட்டளை! பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு இருக்க, தற்போதைக்கு வெளியே வரவேண்டாம் என்பது உண்மை! தனியாய் (சேர்ந்து போகாமல்), வெளியே சென்று அவசிய பொருள்களை (உணவுப்பொருள், மருந்து, காய்கறி,..) வாங்கலாம்! நாம் சேர்ந்துசென்று அத்துமீறுவது போல், காவலர்களும் அத்து மீறி அடிக்கிறார்களாம்! 27--2 மார்ச்சு--ஏப்பிரலில் உச்சம், அதன் பிறகு இல்லை என்பதல்ல! "தூர விலக்கு, தீண்டாமை" தொடரவேண்டும்! எண்ணிக்கையில் அவ்வுச்சம் அடைவதாக ஒரு கணக்கீடு. அவ்வளவே! மற்றபடி ( நோய் உள்ளவரின் எச்சில், சளி வழி) இன்னோருவருக்கு கிருமி தொற்றி-- முதிர்வதற்கு 14-21 நாள்கள் ஆகலாம்! ஆகையால், யாரையும் "தூர விலக்கு, தீண்டாமை" செய்வது நலம். தொடருவது நலம்! (நோய்வுண்டவரின் சளி, எச்சில் பட்டவற்றை தொட வாய்ப்பே இல்லாதபோது, நமது குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனையே இல்லை! சந்தேகம் இருப்பின் "தூர விலக்கு, தீண்டாமை வேண்டும்.") குறைந்த இழப்போடு மக்கள் போதாத காலத்திலிருந்து மீள்வர்! மத்திய மாநில, ஊராட்சி மன்றம் சொல்லும் சரியான தகவல்களைப் பெற்று கடைபிடிக்க வேண்டும் குழப்பமான கருத்துக்களுக்கு தெளிவு பெற முயலவேண்டும்! 1947க்கு முன், காலனித்துவ காலத்தில், நகரத்தை விலகி தூர உள்ள இடங்களில், அரசு உதவி இல்லை; ஆலோசனை இல்லை; மருத்துவ பராமரிப்பு இல்லை; ஏழ்மை இருந்தது; கல்லாமையால் அறியாமை இருந்தது! ஆகையால் நோய்கள் அதிகம் பரவின. சுத்தம், சுகாதாரம் ஒரு கூட்டத்தினரிடையே அதிகமும், இன்னொரு கூட்டத்தினரிடையே அறவே இல்லாதும் இருந்தன! தமிழகத்தில் 800 ஆண்டுகளாக அப்படிதான் இருந்தன! தென்னக உருது / ஆங்கிலம் ஆட்சி மொழி! இயல்பாக இருந்த தீட்டு/ தீண்டாமை ""சமூக தீட்டு, சமூக தீண்டாமை"" என மாறி வேரூன்றியது! தமிழரின்/இந்தியரின் தீட்டு/ தீண்டாமை இயல்பானது. சில சமூகத்தின் பால் கறையானது இடைக்காலத்தில் ஏற்பட்டவையே! தமிழரின்/இந்தியரின் தொன்மை நாகரீகம் அல்ல! அந்நியர் மொழி, அந்நியர் ஆட்சி உறைய வைத்துவிட்ட பழக்கம், கருத்து அது!! சுருக்கம்::::: (1) பழைய இயல்பான தீட்டு தீண்டாமை, சற்று கடுமையாய், ' நம் குடும்பம் அல்லாதவரிடம்' கடைபிடிக்க வேண்டும்! (2)குடும்ப உறுப்பினருக்கு கோவிட்19 அறிகுறி இருந்தால் உடனே மருத்துவ அவசரவுதவியை நாடவும். (3) சுவாசக்கவசம் போடாத, கோவிட19 நோயுண்டவரின் நேர்முக தொடர்பு இருந்திருந்தால் அவசரமருத்துவ உதவி ஆலோசனை பெறுவது கட்டாயம்! (3) நேர்தொர்பு இல்லை, ஆனாலும் நோய்தொற்றி இருக்கலாம் என சந்தேகங்கள் இருந்தால், நம் பழங்கால தீட்டு/தீண்டாமை படி 14-21 நாள்கள் தனிமையில் தங்குக! தனி இடம், தனி துணிகள், தட்டுகள்... இப்படி... இருந்து காலகட்டத்தை கடந்தால் போதும்! (4) பயம் அனாவசியம், கவனம் அவசியம்! -திரு.மலர்வண்ணன் |
மக்களுக்காக >