நமது வலைத்தளம் moothakurichi.com துவங்கி ஓராண்டு நிறைவு :

posted Jul 9, 2012, 11:21 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jul 10, 2012, 10:50 AM ]
மூத்தாக்குறிச்சி வலைத்தளம் http://www.moothakurichi.com/ துவங்கி ஓராண்டு நிறைவு :
இன்று 2012   ஆனி 29 ம் நாள் 10.07.2012 . இன்றுடன் நமது கிராம http://www.moothakurichi.com/ வலைத்தளம் தனது முதலாம் ஆண்டினை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. இவ்வேளையில் இதன் வளர்ச்சிக்கு துணைப் புரிந்த அனைவருக்கும் மூத்தாக்குறிச்சி  கிராம  குழுமம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன் மூத்தாக்குறிச்சி வலத்தளம் தொடர்பான குறை நிறைகளையும் உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்புடன் எதிர்ப்பார்க்கின்றோம்.http://www.moothakurichi.com/needs-feedback


மேலும் நமது வலைத்தளம் கடந்து வந்தப் பாதையை ஒருமுறை மீட்டு, உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்:


வலைத்தளம் அறிமுகப் பதிவு 2003 ஆம் ஆண்டு .-2011 வரை "விரைவில் " என்ற பக்கத்தோடு !!
வலைத்தளத்தில் முதன் முதலில் தகவல் இணைக்கப்பட்ட நாள் ஆனி 25, ஞாயிறு .10.07.2011 ,மணி :காலை:06.30.
வலைத்தளம் மீண்டும் புதுபிக்கபட்டு கார்த்திகை 28 புதன் கிழமை அன்று வெளியிடப்பட்டது .(december 14 2011)
மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி வலைத்தளம்:-
அறிமுகப் பதிவு கார்த்திகை 28 புதன் கிழமை --மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று இன்று உலகத்தில் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் இணையதள மூலமாக நமது ஊரின் பள்ளியை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் மூத்தாக்குறிச்சி இணையதளத்தோடு ghs.moothakurichi.com என்ற இணையதளத்தையும் உருவாக்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டு தோறும் பள்ளி மாணாக்கர்களின் தேர்வுமுடிவுகள் ,சாதனைகள் மற்றும் பள்ளி சார்ந்த தகவல்களை வெளியிட்டு வருகிறோம் .....தகவல் தெரிவிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இணைய குழுவின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்


மேலும் கல்வி தொடர்பான தகவல்களை http://education.moothakurichi.com/என்ற இணைய சுட்டி மூலம் இணைத்துள்ளோம் மேலும் நமது கிராம மாணாக்கர்களின் +2 மற்றும் sslc(எஸ்.எஸ்.எல்.சி )தேர்வுமுடிவுகளை அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில்
ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறோம் ... அது மட்டுமின்றி கிராம மக்களின் கல்வி தகவல்களையும் இணைத்துள்ளோம் (கிராம பட்டதாரிகள் பற்றிய தகவல் :http://education.moothakurichi.com/kirama-pattatarikal
தகவல் இணைக்க அல்லது திருத்த http://form1.moothakurichi.com/, ..கிராம பட்டயதாரிகள் : பற்றிய தகவல் http://education.moothakurichi.com/kirama-pattayatarikal .தகவல் இணைக்க அல்லது திருத்த: form2.moothakurichi.com ) தொழிலக பயிற்சி கல்வி : பற்றிய தகவல் http://education.moothakurichi.com/tolilaka-payirci-kalvi )தகவல் இணைக்க :http://form3.moothakurichi.com/. இந்த இணைப்பை சொடுக்கவும்


திருமண நிகழ்ச்சிகள் :-
ஊரில் நடைபெறும் இல்ல திருமண நிகழ்சிகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் திருமண பத்திரிக்கை மற்றும் தகவல்களை அவர்களுக்கென்று தனி இணைய முகவரி( www.moothakurichi.com/-----weds---- ) உருவாக்கி பதிவு செய்து வருகிறோம் ..... அதற்கு http://www.moothakurichi.com/ceytikal/tirumanaceytikalvativam இந்த இணைப்பில் உள்ள வடிவமைப்பில் இணைய குழுமத்திற்கு தகவல் தெரிவித்தால் போதுமானது , .. மேலும் அவர்கள் விரும்பினால் அவர்களுடைய தனி இணைய முகவரியை அவர்களுடைய திருமண பத்தரிக்கைகளில்
இணைத்துகொள்ளலாம் ..

மேலும் திருமண வரன் தேடுபவர்கள் இந்த இணைப்பில் http://thirumanam.musugundan.com (முசுகுந்த சமுதாய திருமண தளம் )சென்று பதிவு செய்துகொள்ளலாம் ... இந்த சேவை முற்றிலும் இலவசம் .
மேலும் கிராமத்தை பற்றிய அன்றாட நிகழ்வுகள் ,புகைப்படங்கள் , மற்றும் ஒளிதோற்றம் , திருமண ஆகியவற்றை இணைத்து வருகிறோம் ..

பதிவுகள் :
பதிவுகளின் எண்ணிக்கையை சக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் நாம் மிகவும் குறைவான பதிவுகளையே இட்டுள்ளோம். ஊரை பற்றிய வரலாறு செய்திகளையும் திரட்டி வருகிறோம் .. மேலும் உங்களிடம் தகவல் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள் ...இந்த வலையதளம் இன்றைய தலைமுறையினருக்கு மற்றுமல்லாது அடுத்து வரும் தலைமுறையினர்களுக்கும் மிகவும் பயன்படும் வகையில் இருக்கும் என்று எண்ணுகிறோம் .!!! சேகரிக்கும் இன்றைய தகவல்கள் நாளைய வரலாறு மட்டுமில்லாது அடுத்த தலைமுறையினருக்கு " மூத்தாக்குறிச்சி கிராம மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களுடைய வாழ்வாதாரம் எத்தகையது " என்ற கால வரலாற்று சுவடாக இந்த இணையம் விளங்கும் !!!

வழித்தடங்கள்:

வருகையாளர்கள் எவ்வழியூடாக வருகின்றனர் என்று பார்ப்போமானால்
கூகிள் (google),யாஹூ (yahoo)போன்ற தேடு பொறிகளூடாக 46%.
facebook வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக 31%.
நேரடியாக தளத்திற்கு வருவோர் 56%.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரம் தற்போதைய கணிப்பின் படி எடுக்கப்பட்டதாகும். ஆனால், கடந்த மாதங்களின் விகிதாசாரம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

வருகையாளர்களின் எண்ணிக்கை
ஒரு நாளைக்கு சராசரியாக 200 க்கும் அதிகமான வருகைகளாக உயர்ந்துள்ளது.வருகையாளர் கணிப்பான் (Traffic Statistics)

பின்னூட்டங்கள் :


பின்னூட்டங்கள் என்று பார்த்தால் நமது தளத்திற்கு பின்னூட்டம் வருவது என்னவோ மிகவும் குறைவுதான்.
1.பலரின் கருத்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கவேண்டும் என்பது ?
ஓரிரு மாதங்களில் தமிழ் ,ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் ஆகிய மூன்று மொழியிலும் நமது இணையதளம் செயல்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் !!!
2..கிராம வானிலை (weather telecast) பற்றிய தகவல்கள் இணைக்கவேண்டும் என்பது குறித்து ?
விரைவில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் .
3 . திருமண தவகல் இணைக்க தனி இணைய முகவரி( www.moothakurichi.com/-----weds---- ) ?
திருமண பத்திரிக்கையில் இணைக்க அச்சடிக்கும் முன் இணையகுளுவை தொடர்பு கொள்ளுங்கள் : news@moothakurichi.com
4. கிராம மக்களும் இணையத்தில் இணைந்து தகவல் பகிர்ந்து கொள்ளவேண்டும் ?
கிராம குழுமத்தில் http://www.moothakurichi.com/groupsஇணைந்து தகவல் பகிர்ந்துகொள்ளலாம், நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைவருக்கும் மின் அஞ்சலில் மூலம் சென்றடையும்
5.. கிராமத்தின் தேவைகள் பற்றி இணைக்க http://www.moothakurichi.com/village-needs
நீங்கள் தகவல் இணைய குழுமத்தின் மூலமாகவோhttp://www.moothakurichi.com/groups அல்லது உங்கள் கருத்து http://www.moothakurichi.com/needs-feedback என்ற இணைப்பின் மூலம் தகவல் பகிர்ந்து கொள்ளலாம் .

நன்றி :
இணையம் ஒரு வயதினை நிறைவு செய்து புதிய நாளில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த நாளில் அதன் தோற்றம் முதல் அதனுடன் இணைந்து பயணித்தவர்கள் , தகவல் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மூத்தாக்குறிச்சி குழுமம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை இனிவருங் காலங்களிலும் அதன் பயணத்திற்கு அனைவரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவும், காலமும் கைக்கொடுக்கும் என்றே நங்கள் கருதுகின்றோம்.
கிராமம் முன்னேற வழிவகுப்போம் !!!
இனி ஒரு விதிசெய்வோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!

Comments