உங்களை போன்று தினசரி செய்திகள் படிப்பவர்கள் தான் கிராமத்தை பற்றி செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் கேட்கும், பார்க்கும், பேசிவரும் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். முறைபடுத்தப்பட்ட செய்திகளுக்கு அதற்கான வடிவங்களை பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கு அன்றாட நிகழ்வுகள் பற்றி தெளிவாக தெரிய உதவும். செய்திகளோடு நிகழ்படம் மற்றும் நிழற்படங்கள் இருப்பினும் பற்றி இணைய குழு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள். |
அன்றாட நிகழ்வுகள்
2015 காணும் பொங்கல் விளையாட்டு விழா
2015 காணும் பொங்கல் விளையாட்டு விழா வை ஏற்பாடு செய்து இரண்டு நாட்கள் (17th & 18th Jan )முன்னின்று சிறப்பாக சிறப்பித்த நண்பர்கள் ,உறவினர்கள் மற்றும் அணைத்து உள்ளங்களுக்கும் இணையதள குழு சார்பாக மனமார்ந்த் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம் !! ___________________________________________________________________ Image Source : Moothakurichi facebook page https://www.facebook.com/Moothakkurichi Pics updated By : Ranjith , Parthiban & Dhinesh. தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !! ___________________________________________________________________ |
மகளிர் சுயஉதவி குழு
மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு பத்து ஆடு வீதம் ஒன்பது நபர்களுக்கு 90 ஆடுகள் மற்றும் கொட்டாகை அமைக்க ரூபாய் 10000 வீதம் 90000 ரூபாய்க்கான காசோலைகளை மதுக்கூர் ஒன்றிய பால்வள தலைவர் திரு .துரை.செந்தில் அவர்கள் வழங்கிய போது எடுத்தப்படம் அருகில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்துவேல் ,நாகராஜன் ஊராட்சி செயலாளர் பிரபு மற்றும் பயனாளிகள் . நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன் |
மூத்தாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா -2015
மூத்தாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா -2015 நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன் |
ஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருகோயில் திருவிழா அழைப்பிதழ்-2014
ஸ்ரீ மங்களமுடைய அய்யனார் திருகோயில் திருவிழா அழைப்பிதழ் - சித்திரை -31 (14-05-2014) |
லோக்சபா தேர்தல் - 2014
தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதி உடைய நாம் அனைவரும் பங்கேற்று தங்கள் வாக்கு உரிமையை செலுத்த வேண்டும் . நமது நாட்டை நல்ல முறையில் வழிநடத்தக் கூடிய தகுதியான தலைவருக்கே நமது வாக்கு !! யார் எந்த வாக்கு சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்யவேண்டும் குறித்த தகவலுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் !! ஊராட்சி ஒன்றிய தொடக்க ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தெற்கு பார்த்த ஒட்டுக்கட்டிடம் மூத்தாகுறிச்சி 614906 http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176051.pdf ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிதெற்கு பார்த்த ஒ ட்டுக்கட்டிடம் கண்டியங்காடு- 614906 http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176052.pdf ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகிழக்கு பார்த்த ஒட்டுக்கட்டிடம் சிலம்பவேளாங்காடு 614906 http://elections.tn.gov.in/pdf/dt21/ac176/ac176053.pdf நாளை வாக்கு சாவடிகளில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை விரைவில் நமது இணையதளத்தில் வெளியிடப்படும் . "வாக்களிப்போம், புது வாழ்வை அமைப்போம் !!!" |
வாழ்த்துகிறோம் -டாக்டர்.ராஜ்குமார் வீராச்சாமி
இந்த ஆண்டிற்கான இந்திய சிறுநீரகவியலில் இளம் ஆராய்ச்சியாளர் விருது பெற்ற டாக்டர்.ராஜ்குமார் வீராச்சாமி அவர்களை இணைய குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம் , Prestigious indian society of nephrology southern chapter young researcher award இன்னும் பல சாதனையை உருவாக்கி வெற்றியடைய வாழ்த்துகிறோம் |
தமிழக அரசின் விலை இல்லா மிக்சி,கிரைன்டர்,மின்விசிரி
நமது மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் தமிழக அரசின் விலை இல்லா மிக்சி,கிரைன்டர்,மின்விசிரியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் வழகிய போது எடுத்தபடம் நன்றி - பிரபு ஸ்ரீனிவாசன் ![]() |
1-10 of 16